| |
A.ஆர்டர் செய்யும்முறை |
|
|
B.புகுபதிகை மற்றும் எனது பக்கம் |
|
|
C.டெலிவரி |
|
|
| |
 |
 |
எனக்கு தேவையான (அல்லது) விருப்பமான பொருளை தேடுவது எப்படி?. |
| |
எங்களது வலைதள வணிககடையில் பொருட்களை வாங்குவது மிகவும் எளிது.
|
| |
முறை 1:முதலில் முகப்பு பக்கத்திற்கு செல்லவும்.அதன் இடபுறத்தில் உள்ள வகைப்பிரிவுகளின் (படம்-1) இணைப்புகளை பயன்படுத்தி தேவையான பொருளை வாங்கலாம்.

|
(அல்லது)
|
முறை 2:உங்களால் பொருளை தேட முடியவில்லை என்றால்,"பொருளை தேடு" என்பதில் உங்களுக்கு தேவையான பொருளின் பெயரை எழுதி(படம்-2)"தேடு" என்ற பொத்தானை அழுத்தவும்.

|
முறை 3:உங்களுக்கு தேவையான பொருளை பார்த்த பிறகு அந்த பொருளுக்கு அருகில் (படம்-3) உள்ள "add" என்ற பொத்தானை அழுத்தினால்,வலைகூடையில் சேர்ந்துவிடும்.
|
|
 |
|
 |
|
| |
 |
பொருட்களை வலைகூடையில் சேர்த்த பிறகு என்ன செய்ய வேண்டும்?. |
| |
|
| |
 |
இணையதளத்தில் ஏராளமான பொருட்கள் உள்ளன.அதில் நான் தெரிவு செய்த பொருளை எப்படி பார்ப்பது?.
|
| |
ஒவ்வொருமுறையும் "add" என்ற பொத்தானை அழுத்தினால்,அந்தந்த பொருட்கள் வலைகூடையில் சேர்ந்து விடும்.
பொருட்களின் எண்ணிக்கையை மாற்ற விரும்பினால்,எண்ணிக்கையை மாற்றி "update" என்ற பொத்தானை அழுத்தவும்.
பொருட்களை நீக்க விரும்பினால்,அந்த பொருளுக்கு நேராக உள்ள(படம்-8)x-என்ற பொத்தானை அழுத்தவும்.
 |
 |
|
| |
 |
எனது ஆர்டர் முழுமை அடைந்ததா இல்லையா என்பதை எப்படி அறிவது?. |
| |
நீங்கள் ஆர்டரை சமர்பித்து பணம் செலுத்திய பிறகு,உங்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்பபடும்.அந்த மின்னஞ்சலில் ஆர்டர் எண்,
பொருட்களின் விபரம்,பணம் செலுத்திய முறை,டெலிவரி செய்யப்படும் முறை பற்றிய விபரங்கள் அனுப்பபடும்.
நீங்கள் க்ரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தியிருந்தால்,உங்களுக்கு "neratel"-ல் இருந்து மின்னஞ்சல் அனுப்பபடும்.வாடிக்கையாளர்கள் தங்களது அத்தாட்சிக்காக,அந்த மின்னஞ்சலை அச்சிட்டு கொள்ளலாம்.
**குறிப்பு:
சில நேரங்களில் மின்னஞ்சல் வருவதில் தடைகள் ஏற்படலாம்.அப்படி உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்றால் உடனே எங்களை மின்னஞ்சல்(அல்லது)தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்.
|
 |
|
| |
 |
நான் ஏன் வரி செலுத்த வேண்டும்?. |
| |
மாநில அரசின் சட்டத்தின்படி,அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் என்பதால் தொழில் மற்றும் பொருளுக்கான வரியை எங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு செலுத்த வேண்டும்.இந்த வரியால் நாங்கள் பயன்படபோவதில்லை அதற்குரிய நிறுவனத்திடம் நாங்கள் ஒப்படைத்துவிடுவோம்.
வரிக்கான தொகையை "பணம் செலுத்தும்" பக்கத்தில் பார்க்கலாம்.நீங்கள் வாங்கிய பொருளின் விலையோடு வரிக்கான தொகையும் சேர்க்கப்படும்.
|
 |
|
| |
 |
பணம் செலுத்தும் முறைகள் யாவை?. |
| |
மூன்று விதமாக பணம் செலுத்தலாம்.அவை யாவன-
1.இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை:
இணையதளத்தில் பணம் செலுத்த credit card(visa,master card) போன்றவற்றை பயன்படுத்தலாம்.நீங்கள் இணையதளத்தில் பணம் செலுத்த குறைந்தது $60-க்கு பொருட்களை ஆர்டர் செய்திருக்க வேண்டும்.எங்களது இணையதள க்ரெடிட் கார்ட் பணம் செலுத்தும் முறை "NERATEL" நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
2.பொருளை பெற்று கொண்டு ஃபோர்டபுள் NETS மூலம் பணம் செலுத்தும் முறை:
ஃபோர்டபுள் NETS இயந்திரத்தில் உங்களது வங்கி அட்டையை கொண்டு நாங்கள் உங்கள் வீட்டிற்கு பொருளை கொண்டு வரும் போது பணம் செலுத்தலாம்.
3.பணமாக செலுத்தும் முறை:
பொருளை பெற்று கொண்டு பணமாக செலுத்தலாம்.நாங்கள் சிங்கப்பூர் நாணயங்களை மட்டுமே பெற்றுகொள்வோம்.
ஸ்தாபன வாடிக்கையாளர்கள் மட்டும்
ஸ்தாபன வாடிக்கையாளர்கள் மட்டும் காசோலையாக செலுத்தலாம்.காசோலை "Yumtrade Pte Ltd" என்ற நிறுவனத்தின் பெயருக்கு எடுக்கப்படவேண்டும்.நாங்கள் தேதி தள்ளுபடியான காசோலைகள் அனுமதிக்கமாட்டோம்.
|
 |
|
| |
|
 |
எனது ஆர்டரின் நிலையை எப்படி அறிவது?. |
| |
நீங்கள் வாங்கிய பொருளின் நிலையை "எனது பக்கம்" என்ற பொத்தானை அழுத்தவதன் மூலம் அறியலாம்.அதில் சென்று பார்ப்பதற்கு நீங்கள்
உங்களது கணக்கிற்குள் சென்றிருக்க வேண்டும்.அந்த பக்கத்தின் மூலம் நீங்கள் வாங்க நினைத்த பொருட்கள் மற்றும் டெலிவரி நேரம் பற்றிய தகவலை அறியலாம்.
|
 |
| |
|
 |
எனக்கு வேண்டிய பொருள் உங்களது இணையதளத்தில் இல்லை என்றால் என்ன செய்வது?.
|
| |
உங்களுக்கு வேண்டிய பொருள் எங்களது இணையதளத்தில் இல்லை என்றால் அந்த பக்கத்தின் மேல்புறத்தில் உள்ள "பொருள் வேண்டுதல்" என்ற பொத்தானை அழுத்தி,பொருளின் பெயர்,விபரம்,ரகம் போன்ற தகவல்களை அளித்து சமர்ப்பிக்கவும்.நாங்கள் உங்கள் வேண்டுகொளை ஏற்று கொண்டு,அந்த பொருள் விற்பனைக்காக இணையதளத்தில் சேர்த்த பிறகு உங்களுக்கு தகவல் அனுப்புவோம்.
|
 |
| |
|
 |
நான் தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்ய முடியுமா?. |
| |
இந்த சேவை எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
மேலும் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய விரும்புவோர் பணமாகவும்,காசோலையாகவும் மட்டுமே செலுத்த முடியும்.அவர்கள் அலுவலக வேலை நேரங்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை:9.30-6.00,சனி:9.30-1.00) மட்டுமே ஆர்டர் செய்ய முடியும்.
|
 |
| |
|
 |
எங்களது உதவி தேவையா?. |
| |
எங்களது இணையதளத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரேச்சனை ஏற்பட்டால் 68990100 என்ற எண்ணிற்கு அலுவலக வேலை நேரங்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை:9.30-6.00,சனி:9.30-1.00)அழைக்கலாம்.எங்களது "வாடிக்கையாளர் சேவை மையம்" உங்களுக்கு உதவி செய்யும்.
|
 |
| |
|
|
 |
நான் பொருட்களை வாங்க பதிவு செய்ய வேண்டுமா?. |
| |
எங்களது அங்காடியில் பதிவு செய்ய தேவை இல்லை.நீங்கள் இப்பொழுது தான் எங்களது இணையதளத்தில் முதன்முறையாக வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு ஏதும் செய்யாமல் பொருட்களை வாங்கி செல்லலாம்.
|
 |
| |
|
 |
நான் எனக்கான கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டுமா?.
|
| |
நீங்கள் உங்களுக்கான கணக்கை உருவாக்கி கொள்வதன் மூலம் மறுமுறை பொருள் வாங்கும் போது உங்களது தகவல்கள் தர தேவையில்லை தானாகவே எடுத்து கொள்ளபப்டும்.ஆதலால் நீங்கள் பொருட்களை மட்டும் தேர்வு செய்து வேகமாக பொருட்களை வாங்கலாம்.
|
| |
 |
 |
எனது கணக்கில் நான் என்னென்ன செய்லாம்?. |
| |
உங்களது கணக்கின் மூலம் உங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல் மற்றும் கடவுச்சொல்லை மாற்றி கொள்ளலாம்.மேலும்,முன்பு வாங்கிய பொருட்களை பார்த்து மீண்டும் அதை வாங்கி கொள்ளலாம்.
|
 |
| |
|
 |
நான் முதலில் உருவாக்கிய கணக்கை பிறகு உபயோகித்து கொள்ளலாமா?. |
| |
ஆம்,உபயோகித்து கொள்ளலாம்.முதல்முறை நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களது
தகவல்களை(பயனர் முகவரி,மின்னஞ்சல் முகவரி,தொலைபேசி எண்)கொடுத்து "புகுபதிகை" என்ற பொத்தானை அழுத்தினால்,உங்களுக்கான கணக்கு உருவாகிவிடும்.பின்னர் அந்த கணக்கை உபயோகித்து உள்ளே செல்லலாம்.
எப்போதுமே வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும்.வாடிக்கையாளர் தகவல் அவர்கள் ஆர்டர் செய்தாலும்,மாற்றங்கள் செய்தாலும் மட்டுமே உபயோகிக்கப்படும்.
|
 |
| |
|
 |
நான் எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டால்,உதவுவீர்களா?. |
| |
நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால்,நாங்கள் கடவுச்சொல்லை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவோம்.
|
 |
| |
|
 |
"முன்பதிந்தவை" என்றால் என்ன?. |
| |
முன்பதிந்தவை என்பது உங்களது நேரத்தை சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டது.இதன் முலம் நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை உருவாக்கி கொள்ளலாம்.
உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இதை உபயோகித்து பொருட்களை எளிதாக வாங்கி கொள்ளலாம்.
|
 |
| |
|
 |
எனக்கான "முன்பதிந்தவை" உருவாக்குவது எப்படி?. |
| |
முதலில் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும்.பிறகு எந்த பொருளை சேர்க்க வேண்டுமோ அந்த பொருளின் அருகில் உள்ள "add" என்ற பொத்தானை அழுத்தினால் முன்பதிந்தவையில் சேர்ந்து கொள்ளும். .

|
 |
| |
|
 |
"முன்பதிந்தவை"-யை உருவாக்கிய பிறகு அதில் உள்ள பொருட்களை நீக்கவோ,சேர்க்கவோ முடியுமா?.
|
| |
ஆம் முடியும்.நீங்கள் முன்பதிந்தவையை அழுத்தி எந்த பொருள் தேவையில்லையோ அந்த பொருளுக்கு நேர் உள்ள "delete" என்ற பொத்தானை அழுத்தினால்,அந்த பொருள் முன்பதிந்தவையில் இருந்து நீங்கி விடும். எந்த பொருளை சேர்க்க வேண்டுமோ,அந்த பொருளுக்கு நேர் உள்ள "add" என்ற பொத்தானை அழுத்தினால்,அந்த பொருள் முன்பதிந்தவையில் சேர்ந்து விடும்.மேலும் பொருளின் விபரத்தை பார்க்க விரும்பினால்,அந்த பொருளுக்கு நேர் உள்ள "view" என்ற பொத்தானை அழுத்தினால்,அதன் விபரத்தை அறியலாம்

|
 |
| |
|
 |
என்னால் முன்பு வாங்கியவற்றை மீண்டும் வாங்க முடியுமா?. |
| |
ஆம் முடியும்.முதலில் உங்களது கணக்கில் உள்நுழைந்து "எனது பக்கம்" என்ற பொத்தானை அழுத்தவும்.பிறகு, "Review My Previous Order" என்பதை அழுத்தி அதில் வேண்டிய ஆர்டரை
எடுக்க வேண்டும்.அதன் பிறகு "Restore" என்பதற்கு கீழே உள்ள "Yes" பொத்தானை அழுத்தினால் உங்களால் அந்த பொருட்களை மீண்டும் வாங்க முடியும்
|
 |
| |
|
|
| |
|
 |
எனது முகவரி மாறினால் உங்களிடம் எப்படி தெரிவிப்பது?. |
| |
நீங்கள் உங்கள் தகவலை மாற்ற விரும்பினால்,"எனது பக்கம்" என்பதற்குள் சென்று மாற்றி கொள்ளலாம்.
|
 |
| |
|
 |
குறைந்தபட்ச ஆர்டர்கான மற்றும் டெலிவரி செய்வதற்கான தொகை எவ்வளவு?. |
| |
நீங்கள் குறைந்தபட்சம் $60-க்கு பொருட்களை ஆர்டர் செய்திருக்க வேண்டும்.
டெலிவரி செய்வதற்கான தொகை பின்வருமாறு:
$6(வரி இல்லாமல்-before GST) எந்த நேரத்தில்(any time) வேண்டுமானாலும் டெலிவரி செய்ய
$8(வரி இல்லாமல்-before GST) குறிபிட்ட நேரத்தில்(selected time) டெலிவரி செய்ய
$200க்கு மேல் வாங்கினால்,இலவசமாக டெலிவரி செய்பப்படும்.
|
 |
| |
|
 |
என்னால் டெலிவரி செய்வதற்கான நேரத்தை மாற்ற முடியுமா?. |
| |
ஆம் முடியும். ஆனால் பின்வரும் நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
டெலிவரி நேரம் தெரிவிக்க வேண்டிய நேரம்
டெலிவரி நேரம் காலை 9-மணிக்கு மேல் என்றால் : முதல் நாள் இரவு 9.00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்
டெலிவரி நேரம் மதியம் 1-மணிக்கு மேல் என்றால் : அன்று காலை 9.00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்
டெலிவரி நேரம் மாலை 5-மணிக்கு மேல் என்றால் : அன்று மதியம் 12.00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்
நீங்கள் எங்களை மின்னஞ்சலில்-contact@yumtrade.com அல்லது தொலைபேசி-68990100 மூலமாக தொடர்புகொள்ளலாம். |
 |
| |
|
 |
டெலிவரி செய்யப்படும் நேரங்கள் யாவை?. |
| |
எங்களது இணையதளம் தானாகவே நேரங்களை அறிவிக்கும்.
|
 |
| |
|
 |
எனக்கு டெலிவரி செய்ய வரும் போது நான் வீட்டில் இல்லையென்றால்?. |
| |
எங்களது டெலிவரி வருவதற்குள் உங்களை தொடர்புகொள்வோம்.நீங்கள் உங்களது விபரத்தை தெரிவிக்கலாம்.மேலும் வீட்டில் இல்லையென்றால்,வேறு யாரையாவது வீட்டில் இருக்க செய்யலாம்.
நாங்கள் டெலிவரி செய்ய வரும்போது நீங்கள் வீட்டில் இல்லையென்றால் மறுபடியும் கொண்டு வர $6.00 உங்கள் தொகையோடு சேர்க்கப்படும்.
|
 |
| |
|
 |
நீங்கள் எல்லா நாடுகளுக்கும் டெலிவரி செய்வீர்களா?. |
| |
தற்போது நாங்கள் சிங்கப்பூருக்கு மட்டுமே டெலிவரி செய்து வருகிறோம்.ஆனால் நீஙகள் சிங்கப்பூரராக இருந்து வெளிநாட்டில் வசித்து வந்தால்,எங்களை தயங்காமல் அணுகுங்கள்.நாங்கள் எங்களால் முடிந்த முயற்சியை எடுப்போம்.
|
 |
| |
|
 |
எனக்கு பொருட்கள் திருப்தி இல்லையென்றால் திருப்பி தரலாமா?. |
| |
நாங்கள் டெலிவரி செய்ய வரும்போது பொருட்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என பார்த்தே கொடுப்போம்.அப்படி உங்களுக்கு பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் திருப்பி(1 முதல் 3 நாட்கள்) தந்து விடலாம்.அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ,தொலைபேசி மூலமாகவோ அணுகலாம்.
|
 |
| |
|
 |
திருப்பி கொடுக்கும் முறை. |
| |
நீங்கள் திருப்பி கொடுக்க நினைக்கும் பொருள் நாங்கள் கொடுத்தபடியும்,பிரிக்காமலும்,உபயோகிக்காமலும் இருக்க வேண்டும்.சிறப்பு சலுகை உள்ள பொருட்கள் திருப்பி பெறமாட்டா.
|
 |
| |
|
 |
மற்றும் சில.. |
| |
உங்கள் இடத்திற்கு வருவதற்கு சிறப்பான அனுமதி தேவை என்றால்,எங்களிடம் தெரிவியுங்கள்.
டெலிவரி பாதுகாப்பு:
பருவநிலை சரியில்லை என்றால் டெலிவரி செய்யப்படும் நேரம் மாற்றப்படும்.
|
 |
| |
|
| |
|
| |
|